ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்குள் மீண்டும் வந்துள்ள ஆபத்து
இலங்கையில் கடந்த ஒன்பது வருடங்களின் பின்னர் மலேரியா நோயுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காலி - நெலுவ பிரதேசத்தில் குறித்த நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 27 ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மலேரியாவினால் பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் இறுதியாக மலேரியா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அதன்பின்னர், மூன்று வருட காலப்பகுதியில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படாததால், இலங்கை மலேரியா நோயற்ற நாடாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri