டெங்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் நுளம்பு குடம்பிகள் அடையாளம்: வைத்தியர் கே.கிரிசுதன்(Video)

Police Batticaloa People Children Dendue
By Kumar Jan 12, 2022 08:15 AM GMT
Report

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20  வீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் டெங்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சிறுவர்கள், பெண்கள் டெங்கு தாக்கத்திற்குள்ளாகும் நிலை அதிகரித்து வருவதாகவும் இது இன்னுமொரு அபாயகரமான சூழலைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் வகையில் புகை விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதி மற்றும் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்ட பகுதிகளில் இந்த புகை விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதனின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் இந்த புகை விசிறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த மாதத்தின் ஆரம்ப வாரத்தில் ஆறு டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளதனால் பொதுமக்கள் தங்களது சுற்றாடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் வேண்டுகோள்விடுத்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையிருந்து டெங்கு அதிகரித்த நிலை ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் படிப்படியாகக் குறைந்து நவம்பர் மாதம் வரையில் கட்டுப்பாட்டின்கீழ் காணப்பட்டது.

இருந்தபோதும் வடகீழ் பருவ பெயர்ச்சி மழையின் பின்னர் கோவிடினால் முடக்க நிலையிலிருந்து வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், டெங்கின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

டிசம்பர் மாதம் 10 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள். 2022ஆம் ஆண்டின் முதல் வாரத்திலேயே ஆறு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையானது எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றோம். எமது டெங்கு தடுப்பு குழுவினர் வீடுகள், காணிகளை சோதனைக்குட்படுத்திய நிலையில் 20வீதமான வீடுகள் டெங்கு நுளம்பு பரவலுக்கு ஏதுவான வகையில் டெங்கு நுளம்பு குடம்பிகளைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் அடையாளப்படுத்தப்படும் நிலை அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. இது இன்னுமொரு அபாயகரமான சூழலைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது.

வீடுகளுக்குள்ளேயும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் கல்வி நிலையங்கள், பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு பரவும் இடம் காணப்படலாம் என்ற அபாயத்தினை சுட்டிக்காட்டி நிற்கின்றது.

இதேநேரம் கோவிட் அச்சுறுத்தலைத் தடுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரையும் இதனைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

எமது பிரதேசம் இன்னுமொரு ஆபத்து நிலையினை நோக்கி நகராது இருப்பதற்காகப் பொதுமக்கள் தங்களது வீடுகள்,காணிகள்,அலுவலகங்கள்,பாடசாலைகள் நீர் தேங்கக்கூடிய இடங்கள், நீர் தேங்கக்கூடிய பாத்திரங்களை அகற்றி டெங்கு பாரிய அபாயகரமானதாக மாறாது உதவிசெய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

புத்தாண்டு காலம் என்பதனால் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கடந்த காலத்தில் இவ்வாறான காலப்பகுதிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் மக்கள் மிகவும் கவனமாகச் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்கு நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டி.எஸ்.சஞ்ஜீவ் வழிகாட்டலில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த வருடத்தில் அதிக நோயாளர்கள் இனம் காணப்பட்ட இடங்களான கல்குடா, கண்ணகிபுரம் மற்றும் மீராவோடை போன்ற கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள குடியிருப்பாளர்களின் வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வீடு வீடாகச் சென்று களப் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.


இதன்போது சுற்றுச் சூழல் அவதானிக்கப்பட்டு நீர் தேங்கி நிற்கும் தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு நுளம்பு பரவும் இடங்கள் அழிக்கப்பட்டு விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகிறது.

குறித்த நிகழ்வில் சுகாதார பரிசோதகர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

GalleryGalleryGalleryGalleryGallery
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US