சாதாரண அஞ்சல் முத்திரையின் விலையை அதிகரிக்க யோசனை
சாதாரண அஞ்சல் முத்திரை ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலைக்குள் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுச பெல்பிட (Anusha Palpita) தெரிவித்துள்ளார்.
அஞ்சல் திணைக்களம் தற்போதைய நிலையில் 7000 மில்லியன் ரூபாய் நட்டத்துடன் இயங்கி வருகிறது.
சம்பள அதிகரிப்பு
கடந்த வருடம் திணைக்களத்தின் நட்டம் 3,200 மில்லியனாக குறைக்கப்பட்டபோதும், இந்த ஆண்டு 2,800 மில்லியன் ரூபாய் அஞ்சல் பணியாளர்களின் சம்பள அதிகரிப்புக்காக செலவிடப்பட்டது.
இதன் காரணமாக தற்போது நட்டம் 7000 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.
இந்த நட்டம் தொடர்ந்து அதிகரித்தால், 2025 ஆம் ஆண்டுக்குள் இது 5 பில்லியன் ரூபாய்களை எட்டி விடும்.
பொதுவாக இலங்கையில் 1.5 மில்லியனுக்கும் குறைவான மக்கள் அஞ்சல் முத்திரைகளை பயன்படுத்துகின்றனர்,
திறைசேரியின் ஒப்புதல்
இருப்பினும் முழு நாடும் அஞ்சல் துறையின் இழப்பை தாங்குகிறது என்று அனுச பெல்பிட்ட குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு வரை ஒரு முத்திரையின் விலை 15 ரூபாவாக இருந்தது. ஆனால், தற்போது முத்திரையின் விலை 50 ரூபாவாகும்.
இந்தநிலையில் அஞ்சல் முத்திரையின் விலையை 100 ரூபாயாக உயர்த்த திறைசேரியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுச பெல்பிட தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |