நாடாளுமன்றில் இணைய பாதுகாப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை
இணைய பாதுகாப்பு ஆணையகத்தின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய பாதுகாப்புச் சட்டத் திருத்தங்களில், இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் இணைய இடைத்தரகர்களுக்கு இணைய இடங்களுக்கான அணுகலை மறுக்கும் ஆணையகத்தின் அதிகாரத்தை நீக்குவதும் உள்ளடங்குகிறது.
இணையவழி பாதுகாப்பு திருத்தச் சட்டமூலம் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்தவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இணைய சேவை வழங்குநர்கள்
கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த யோசனை திருத்தங்கள் மீது பங்குதாரர்கள் அதிருப்தி எழுப்பிய பின்னரே, புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இந்த வரைவு யோசனை, ஒருவரின் தனிப்பட்ட தகவல் தொடர்புகளை வெளியிடுவதன் மூலம், இலக்கு நபரை துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்ட அறிக்கைகளுக்கு எதிராக சட்டத்தின் பயன்பாட்டை கொண்டு வருகிறது.
அத்துடன் வெறுக்கத்தக்க பேச்சு, வன்முறையைத் தூண்டுதல், தவறான தகவல், இணைய பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகம் உள்ளிட்ட தீங்கிழைக்கும் உள்ளடக்கம் மற்றும் நடத்தைகளை நிவர்த்தி செய்ய விதிகளின் மூலம் நடைமுறைக் குறியீட்டை உருவாக்க ஆணையகத்திற்கு இந்த யோசனை அதிகாரம் அளிக்கிறது.
திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன், இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் இணைய இடைத்தரகர்கள் தன்னார்வ அடிப்படையில் ஒரு நடைமுறைக் குறியீட்டை உருவாக்க அல்லது ஆணையகத்துடன் இணைந்து நடைமுறைக் குறியீட்டை உருவாக்குவதற்காக மூன்று மாத அவகாசம் வழங்கப்படும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள், அவ்வாறு செய்யத் தவறினால், அத்தகைய நடைமுறை நெறிமுறையை உருவாக்கவும், மின்னணு வடிவத்தில் ஒரு வரைவை வெளியிடவும், ஆணையகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam