காணாமல் போனவர்களை தேடுவதற்கான புதிய பொறிமுறையை பரிந்துரைக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) இலங்கையில் காணாமல் போனவர்களின் நிலை மற்றும் அவர்களின் இருப்பிடம் பற்றிய பதில்களை வழங்கும் ஒரு பொறிமுறையை பரிந்துரைத்துள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உணர்வுகள், பொருளாதாரம், சட்ட மற்றும் நிர்வாகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நாடளாவிய ஆதரவுத் திட்டத்தை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இலங்கையில் நடைமுறைப்படுத்துகிறது.
காணாமல் போனோருக்கான சர்வதேச தினம்
காணாமல் போனோருக்கான சர்வதேச தினமான இன்று, ஆயுத மோதல்கள், வன்முறைகள், பேரழிவுகள், மனிதாபிமான அவசரநிலைகள் மற்றும் இடம்பெயர்வு போன்ற காரணங்களால் உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ள அல்லது தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்திருப்பதை சங்கம் நினைவுகூறுகிறது.
தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாதவர்களின் துன்பம், மனிதாபிமான பிரச்சினைகளில் மிகக் குறைந்த கவனத்தையே ஈர்த்துள்ளது.
பெற்றோர், கணவன், மனைவி, குழந்தை அல்லது உடன்பிறந்தோருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல், குடும்பங்கள் மீது தாங்க முடியாத சுமையை, இந்த துன்பம் சுமத்துகிறது.
தொடர்ந்து நம்பிக்கை மற்றும் விரக்திக்கு இடையே துக்கம் அனுசரிக்க முடியாமல் அவர்கள் திண்டாடுகின்றனர் என்று சர்வதேச செஞ்சலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
மக்களின் அடிப்படை உரிமை
காணாமல் போன தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கங்கள், பதில்களை வழங்குவதற்கு, சர்வதேச சங்கம் ஊக்குவிக்கிறது.
இதன் மூலம் காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் தலைவிதி மற்றும் இருப்பிடத்தை அறியும் குடும்பங்களின் உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது.
இது ஒரு முதல் கட்ட மனிதாபிமான நடவடிக்கையாகும். தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய பதில்களுக்காக காத்திருக்கும் குடும்பங்கள், தங்களின் அன்புக்குரியவர்கள் இல்லாததால் உருவாகும் பல உணர்வு , நிர்வாக, சட்ட மற்றும் பொருளாதார சவால்களைச் சந்திக்கப் போராடுகிறார்கள்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கை
இந்தநிலையில், குடும்ப இணைப்புகள் சீர்குலைவதைத் தடுப்பதற்கும், பிரிந்த குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான தொடர்பைப் பேணுவதற்கும், இறந்தவர்களின் சரியான தகவல்களை உறுதி செய்வதற்கும், தேசிய கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச சட்டத்தின் கீழ் இருக்கும் கடமைகளுக்கு ஏற்ப தொடர்புடைய வழிமுறைகள் மற்றும் கட்டமைப்புகளை நிறுவுவதற்கும் பாடுபடுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே அதிகாரிகள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும், குறித்த
குடும்பங்களின் அவலநிலையை உணர்ந்து, அவர்களின் தேவைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்
மற்றும் காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
கோரியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
