அமெரிக்காவில் தொடரும் ட்ரம்பின் அடக்குமுறை! 5 வயது சிறுவன் கைதால் பரபரப்பு
அமெரிக்காவில், 5 வயது சிறுவனை ICE அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவமானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தன் பின்னர் அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் மீது கடுமையான அடக்குமுறை இருந்து வருகிறது.
அமெரிக்காவில் குடியேற்ற நடவடிக்கை
ICE - குடிவரவு அதிகாரிகள் ஏகபோக அதிகாரம் பெற்று சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி 7 ஆம் திகதி, காரை விட்டு இறங்க மறுத்ததாக 37 வயதான ரெனி நிக்கோல் குட் என்ற பெண் ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தற்போது,அமெரிக்காவில், 5 வயது சிறுவனை ICE அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவமான பல்வேறு விமர்சனங்களுக்குட்பட்டு வருகின்றது.
மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபோலிஸ் நகரில் பெற்றோருடன் வசித்து வந்த 5 வயது சிறுவன் லியாம் கோனேஜோ ராமோஸ் பாடசாலை முடிந்து தந்தையுடன் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவர்களை வழிமறித்து ICE அதிகாரிகள்இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
5 வயது சிறுவன் கைது
அங்கு சிறுவனை பகடையாக வைத்து வீட்டுக்குள் இருந்த தாயையும் வெளியே வரவழைத்து கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர். ஆனால் சிறுவனின் தந்தை தனது மனைவியை கதவை திறக்க வேண்டாம் என வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

இதன்பின் சிறுவனையும் தந்தையையும் ICE தடுப்புக்காவலில் அடைத்தனர். சிறுவனின் தந்தை முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருந்ததாக குற்றம்சாட்டி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆனால் அவர்களின் குடும்ப வழக்கறிஞர் மார்க் ப்ரோகோஷ் கூறுகையில், 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த லியாமின் குடும்பம், புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர், அதன் பிறகே அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
ஆனாலும், அமெரிக்க குடியேற்றத் துறை அவர்களைக் கைது செய்துள்ளது. இருவரையும் அதிகாரிகள் டெக்சாஸில் உள்ள தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இணையத்தில் பரவல்
லியாம் மட்டுமின்றி, இரண்டு 17 வயது சிறார்கள் மற்றும் ஒரு 10 வயது சிறார் என மொத்தம் நான்கு குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவன் பயின்று வந்த கொலம்பியா ஹைட்ஸ் பள்ளி கண்காணிப்பாளர் ஜீனா ஸ்டென்விக் தெரிவித்துள்ளார்.
Liam Ramos is just a baby. He should be at home with his family, not used as bait by ICE and held in a Texas detention center.
— Kamala Harris (@KamalaHarris) January 22, 2026
I am outraged, and you should be too. pic.twitter.com/djr2z1AG0N
நீல நிறத் தொப்பி மற்றும் ஸ்பைடர்மேன் பையை முதுகில் சுமந்தபடி, பயத்தில் உறைந்து நிற்கும் லியாமின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பரவலாகி வருகின்றன.
5 வயது சிறுவனைத் தடுப்புக்காவலில் வைத்தது மிகவும் எல்லை மீறிய செயல் என்றும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அமெரிக்க முன்னாள் துணை ஜனாதபதி கமலா ஹாரிஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan