ஐ.சி.சியின் சிறந்த வீரர் விருதை வென்ற இலங்கை வீரர்
2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கான ஐ.சி.சியின் (ICC) சிறந்த வீரர் விருதுக்கு இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் (kamindu Mendis) தேர்வாகியுள்ளார்.
பிரபாத் ஜயசூரிய (Prabath Jayasuriya) மற்றும் வனிந்து ஹசரங்கவுக்கு (Wanindu Hasaranga) பின்னர் இந்த விருதை வெல்லும் மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.
இது குறித்து கமிந்து மெண்டிஸ் கூறுகையில், இது தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் ஒரு உந்துசக்தியை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கமிந்து மெண்டிஸ் கருத்து
மேலும், இது போன்ற விருதுகள் எங்களை அணிக்காக மேலும் உழைக்க செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பங்களாதேஸ் அணிக்கெதிரான நடைபெற்ற போட்டிகளில் கமிந்து மெண்டிஸ் சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam