இலங்கை முழுவதும் ஒளிபரப்பை தொடங்கியது ஐபிசி தமிழ் தொலைக்காட்சி!
இலங்கை முழுவதும் ஐபிசி தமிழ் தொலைக்காட்சி தனது பரீட்சார்த்த ஒளிபரப்பு சேவையை ஆரம்பித்துள்ளது.
உலகத் தமிழர்களுக்கு ஓர் உறவுப் பாலமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஐபிசி தமிழ் தொலைக்காட்சி இப்பொழுது தனது சேவையினை இலங்கையில் ஆரம்பித்திருக்கிறது.
ஸ்ரீலங்கா ரெலிகொம் வலையமைப்பின் PEO TV இல் அலைவரிசை(channel Number) 105 இல் துல்லியமாக தனது பரீட்சார்த்த ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது.
அதேவேளை, ரீவி லங்கா(Tv Lanka) வலையமைப்பின் HD தரத்தில் அலைவரிசை இலக்கம்(channel Number)10 இலும், சாதாரண ஒளிபரப்பை அலைவரிசை இலக்கம்(channel Number)9 இலும் கண்டு மகிழலாம்.
திரைப்படங்கள், பாடல்கள் இலங்கை கலையக நிகழ்ச்சிகள், அனைத்தையும் கண்டு மகிழ்ந்திருக்க புதிய உத்வேகத்துடன் இலங்கையில் தடம் பதித்திருக்கிறது ஐபிசி தமிழ் தொலைக்காட்சி.