தமிழும் கலையும் பயில்வதற்கான ஒரு தளம்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
தமிழும் கலையும் பிரிக்க முடியாதது. கலைகளின் சாரம்தான் கலாசாரம். தமிழ் கலாசாரம் இல்லாமல் தமிழர்கள் இல்லை. இந்தக் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் கலைகளை வளர்ப்பது அவசியமாகும்.
நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல பெரும்முயற்சி எடுத்துக்கொண்டும் அதை செய்துகொண்டும் இருக்கிறோம். இக்காலச் சூழலில் தமிழையும் கலையையும் தடையின்றி நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியே இது.
உலகம் முழுவதும் இணைய வழியில் தமிழும் கலையும் பயில்வதற்கான ஒரு களத்தை ஐ.பி.சி தமிழ் ஊடகம் அமைத்துக்கொடுக்கின்றது.
இதற்கான ஊடக சந்திப்பும் உரையாடலும் இம்மாதம் 15 ஆம் திகதி மாலை 3 மணிக்கு இணைய வழியில் இடம்பெறவுள்ளது.
ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
எனவே இந்நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் ஐ.பி.சி தமிழ் ஊடகம் சார்பில் அழைப்பு விடுக்கின்றோம்,




