அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்! சபையில் விடுக்கப்பட்ட பகிரங்க அறிவிப்பு-செய்திகளின் தொகுப்பு
நாட்டை விட்டு ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள ரத்தின கற்கள் வெளியேறியுள்ளதாகவும், ஆனால் 170 மில்லியன் டொலர்கள் மட்டுமே நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் எதிர்வரும் வருடம் நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத் தருவதாகவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவாதம் நடத்தி வருவதாகவும் 180 நாட்களுக்குள் நாட்டிற்கு டொலர் வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, தனது முயற்சியால் அடுத்த ஆண்டு நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத்தருவேன் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,