அமைச்சுப் பதவி குறித்து கருத்து வெளியிட மாட்டேன்! எஸ்.பி. விளக்கம்(photos)
அமைச்சுப் பதவி பற்றி கதைப்பதற்கு கூட விருப்பம் இல்லை. இனி அதைப் பற்றி கதைக்கப்போவதும் இல்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (21.04.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ''அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. எப்போது கல்வி அமைச்சைப் பொறுப்பேற்கின்றீர்கள்”என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவை மாற்றம்
" அது பற்றி எனக்குத் தெரியாது. அது குறித்து கதைப்பதற்குக் கூட விரும்பவில்லை. கருத்து வெளியிடவும் மாட்டேன். பதவியைக் கேட்டு பெறப்போவதும் இல்லை.”–எனவும்
எஸ்.பி. குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் வெளியிட்ட வீடியோவை பாருங்க Cineulagam
