இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் ஒருபோதும் செயல்படமாட்டேன் -டக்ளஸ் தேவானந்தா
நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனத்திற்கு பூனகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணை அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில் நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளைக் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கெளதாரி முனையில் காணியற்ற குடும்பங்களுக்குப் பயிற்சியைக் காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri