ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை: ரணில் விக்ரமசிங்க
ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தாம் பாதுகாத்த ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மட்டுமே எனவும் பிரேமதாசவிற்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வந்த போது தாமே முன்வந்து அவரை பாதுகாத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப உதவுமாறு கோரிக்கை
எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப உதவுமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரம் கிடைத்தால் அதனை பெற்றுக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிகாரம் கிடைக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ளாதவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
நெருக்கடியான ஆட்சி
நாடு மிக நெருக்கடியாக இருந்த காலத்தில் தாம் ஆட்சியை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், மொட்டு கட்சி தமக்கு ஆதரவு வழங்கியதாகவும், தனியாக நாட்டை மீட்டிருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய தரப்புக்களுக்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
