நானே அரசாங்கத்தில் இருக்கும் பலமிக்க நபர்- உதய கம்மன்பில
அரசாங்கத்திற்குள் இருக்கும் பலமிக்க நபர் தான் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கும் மிகவும் பலமிக்க நபர் யார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே கம்மன்பில இதனை கூறியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை சம்பந்தமான விடயத்தில், எரிசக்தி அமைச்சருக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசத்திற்கு பின்னால், ஜனாதிபதி மற்றும் பிரதமரை தாண்டி இருக்கும் பலமிக்க நபர் யார் என நளின் பண்டார கேள்வி எழுப்பி இருந்தார்.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri