ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து மகிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தனக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்க பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உண்மைக்கு புறம்பான செய்தி
அந்த பதிவில், ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை சில தரப்பினர் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan