சொந்த நாட்டிலேயே நிறவெறி - இந்திய கிரிக்கட் வீரர் ஒருவரின் அதிருப்தி தகவல்
சொந்த நாட்டிலேயே நிறவெறி பாகுபாட்டினால், தான் ”கேலிக்கும் கிண்டலுக்கும்” ஆளானதாக இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் இடதுமுறை சுழல் பந்து வீச்சாளர் எல்.சிவராம கிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது டுவிட்டில் இது தொடர்பில் தகவல் அளித்துள்ள சிவராமகிருஸ்ணன், நிறம் காரணமாக தாம் விமர்சிக்கப்பட்டதாகவும், நிறப் பாகுபாடு காட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்
இது துரதிஷ்டவசமாக இந்தியாவிலும் நடப்பதாக சிவராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்
அமொிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை அடுத்து, இனவெறிக்கு எதிராக, சர்வதேச கிரிக்கட்டின் முன்னணி மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்களான டேரன் சமி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் செயற்பட்டனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் நடைபெற்ற 20க்கு20 உலகக்கிண்ணப் போட்டியில் கூட, அனைத்து அணிகளின் வீரர்களும் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு உறுதி எடுத்துக்கொண்டனர்.
இந்தநிலையிலேயே தாம், சொந்த நாட்டிலேயே நிறவெறி பாகுபாட்டினால், தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதாக சிவராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்திய அணிக்காக ஆரம்ப வீரராக ஆடிய அபினவ் முகுந்தும், தாம் நிறவெறிக்கு உட்பட்டதாக தெரிவித்திருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணியில் கறுப்பின வீரர்களான மகாயா நிடினி, போல் ஆடம்ஸ், ஒஷ்வெல் பிரின்ஸ் உள்ளிட்ட வீரர்களும் தாம் நிறவெறிக்கு உட்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
”அனைவரும் ஒன்றாக விளையாடுவார்கள், எனினும் அணியினர் பயணிக்கும் பேரூந்தில் ஒன்றாக அமர மாட்டார்கள். ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள். என்று நிடினி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! Manithan

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri
