ஒரு பாடசாலை சீருடை மட்டுமே என்னிடம் இருந்தது-விமல் வீரவங்ச
சிறுவயதில் பாடசாலைக்கு செல்லும் போது ஒரு காற்சாட்டையும் ஒரு சட்டையும் மாத்திரமே இருந்தாகவும் அதனை சலவை செய்து தினமும் அணிந்து சென்றதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களே மாணவர்களின் முன்னுதாரணம்

பாடசாலை ஆசிரியர் தொழில் என்பது வேறு அரச வேலைகளை விட வித்தியாசமான தொழில்.ஆசிரியர்களையே மாணவர்கள் பின்பற்றுவார்கள் என்பதுடன் முன்னுதாரணமாக எடுப்பார்கள்.
இதனால், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் வெளி தோற்றம் அரசின் வேறு தொழில்களை செய்வோரின் வெளி தோற்றமும் வித்தியாசமானது.
அரசசார்பற்ற நிறுவனங்களின் அடிவருடிகள் காலத்திற்கு காலம் ஒவ்வொரு யோசனைகளை கொண்டு வருகின்றனர்.
மாணவர்களின் சீருடையில் மாற்றம் செய்ய முடியாது என்பதால் ஆசிரியர்களின் உடையில் மாற்றம் செய்ய முயற்சி

மாணவர்களின் சீருடையை கழற்றுங்கள் என்று உடனடியாக கூற முடியாது என்பதால், ஆசிரியர்களின் உடையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
போலியான அனுதாபத்தை உருவாக்கி இதனை செய்ய வேண்டாம் எனவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan