நாடாளுமன்றத்தில் எனது கருத்துக்களைப் பயமின்றி வெளியிட முடியும் - சாணக்கியன்
எனக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் எனது கருத்துக்களைப் பயமின்றி வெளியிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்திற்கு எதிராக ஷேஹான் சேரசிங்கவினால் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
எனது கருத்தில் நான் குறிப்பிட்ட ஒரு விடயத்திற்கு எதிராகக் குற்ற விசாரணை திணைக்களம் என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஷெஹான் சேரசிங்க குறிப்பிட்டிருந்தார்.
எனக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் எனது கருத்துக்களைப் பயமின்றி வெளியிட முடியும் என்பதனை அவருக்கு நான் தெரியப்படுத்த விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 17 மணி நேரம் முன்
ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri