சிறையிலிருந்து எழுதுகின்றேன்! ரஞ்சன் ராமநாயக்கவின் உருக்கமான கடிதம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில் தனது 58ஆவது பிறந்த தினமான நேற்று (11.03) சிறைச்சாலையில் இருந்தவாறு ஊடகங்களுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் இருந்து எழுதுகிறேன். மார்ச் 11 என்பது விசேட நாள் ஆகும். எனக்கு 58 வயது பூர்த்தியாகின்றது.
நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட வாழ்க்கையின் முதலாவது பிறந்த நாளாக இன்றைய நாள் (நேற்று) அமைந்துள்ளது.
கடந்த வருடமும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிறைக்குள் தள்ளினர். எனினும், பிறந்த நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டேன்.
தற்போது நான் சிறையில் இருந்தாலும் என்னை தலைப்பிட்டு வெளியில் பல கதைகள் பேசப்படுகின்றன. எனது விடுதலைக்காக பலர் வெளியில் இருந்து செயற்படுகின்றனர். அவ்வாறு செயற்படுபவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகிறேன்.
நான் சில நாட்கள் உள்ளே இருக்க வேண்டியிருக்கும். ஆகவே பெரிய எதிர்பார்ப்பு எதனையும் வைத்துக்கொள்ள வேண்டாம். நான் யாரும் இல்லாத ஒருவன்.
நான் 60 வயதில் ஓய்வு பெறப்போவதில்லை. 1963இல் பிறந்த பலரை விட நான் பலசாலி. ஆகவே, உயிர் இருக்கும் வரை நான் மக்கள் சேவகனாகச் செயற்படுவேன்.
என்னால் தொடர்ச்சியாக கடிதம் எழுத முடியாது. வெளியில் வந்தாலும் கையசைக்க விடுகிறார்கள் இல்லை. முடியுமானபோது பின்னர் எழுதுகிறேன். இன்று கொண்டாட்டங்களில் ஈடுபட நினைப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri