நான் விரக்தியில் இருக்கின்றேன்! எஸ். பி. திசாநாயக்க ஆதங்கம்
கல்வி அமைச்சை தனக்கு வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
கல்வி அமைச்சு எஸ். பி. திசாநாயக்கவிடம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்,
“கல்வி அமைச்சு பதவி தனக்கு வழங்கப்படவுள்ளதாக யாரும் கூறவில்லை. அது குறித்து எனக்கு தெரியாது. எனக்கு அமைச்சு பதவி வழங்கினாலும் ஒன்று, இல்லையென்றாலும் ஒன்று.
எவ்வாறாயினும், தான் விரக்தியால் ஆளும் கட்சியின் பின் வரிசையில் இருப்பதாக எஸ். பி. திசாநாயக்க தெரிவித்திருந்தார். மூப்பு அடிப்படையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அடுத்தபடியாக தான் இருக்கின்றேன்.
எனினும், இந்த அரசாங்கத்தில் எனக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை. எனக்கு வழங்கப்படாதது தவறு தான் எண்ணுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri