குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளிலிருந்து விலகும் பட்டினமும்,சூழலும் பிரதேச சபை தலைவர்
திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்வதாக பட்டினமும் சூழலும் பிரதேச சபை தலைவர் ஆர்.ஏ.டீ.எஸ்.டீ.ரத்நாயக்க (R.A.D.S.D.Ratnayake) அறிவித்துள்ளளார்.
இது தொடர்பில் இன்று விளக்கமளிக்கும் ஊடகசந்திப்பொன்று திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளுராட்சி மன்றங்களில் அதிகூடிய கழிவுகளை அகற்றும் பொறுப்புடைய சபையாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை விளங்குகின்றது.
அந்தவகையில் நேற்றையதினம் கூடிய சபையின் கூட்டத்தில் இன்று (12) முதல் கழிவுகள் அகற்றும் பணியில் இருந்து விளகுவதற்க்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆர்.ஏ.டீ.எஸ்.டீ.ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) உன்னதமான வேலைத்திட்டங்களின் படி சேதன பசளை உற்பத்திக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் அமுல்படுத்தினாலும், சேதன பசளை உற்பத்திக்கான ஒரு இடத்தினை வழங்க முடியாமல் நாளுக்கு நாள் காலம் தாழ்த்திய வண்ணம் உள்ளதாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரிப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ள போதிலும் அதற்கான காணியை வழங்காமலிருப்பது கவலைக்குரிய விடயம் ஆகையினால் இன்றிலிருந்து கழிவுகளை அகற்றுவதிலிருந்து விடுபடுவதாக அறிவிக்கின்றோம்.
கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்தி குழு, மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பலருடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம்.
இருப்பினும் ஒரு சில அரச அதிகாரிகளினால் நாளுக்கு நாள் காலம் தாழ்த்தி செல்கின்றது.
பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட கன்னியா கழிவு அகற்றும் காணி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அதில் சபைக்கு எவ்வித வருமானமும் இல்லை.
சேதன பசளையினை உற்பத்தி செய்வதற்கு தமக்கான ஓர் நிலத்தினை ஒதுக்கி தருமாறு வலியுறுத்தியே இவ் கழிவு அகற்றும் பணியிலிருந்து விலகிக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
