புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த ஹைலன்ஸ் மத்திய கல்லூரி
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் 53 மாணவர்களை சித்திபெற செய்து ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மற்றுமொரு சாதனையினை படைத்துள்ளதாக அக் கல்லூரியின் அதிபர் எஸ்.ராஜன் தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக இன்று 04ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
99 சதவீத மாணவர்கள்
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஹைலன்ஸ்; மத்திய கல்லூரியிலிருந்து 101 மாணவர்கள் இம்முறை தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றியதாகவும் அதில் 53 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள 70 புள்ளிகளுக்கு மேல் 99 சதவீத மாணவர்கள் பெற்றுள்ளதாகவும் இது ஹைலன்ஸ் கல்லூரிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக உழைத்த ஆரம்ப பிரிவு பிரதி அதிபர் சுகுமார், ஆசிரியர்கள், பகுதி தலைவர்கள் உட்பட கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
இவ்வருடம் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் சிங்கள மொழி மூலம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 303 பேரும் தமிழ் மொழி மூலம் 74 ஆயிரத்து 368 பேருமாக மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 671 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.
இதில் 51ஆயிரத்து 969 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேலாக புள்ளிகளை பெற்றுள்ளதாகவும் இது 17.11 வீதம் எனவும் கடந்த வருடத்தினை விட 1.06 வளர்ச்சியினை காட்டுவதாக பரீட்சை ஆணையாளர் ஏ.கே.எஸ் இந்திகா குமாரி லியனகே தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்டுகள்: அமெரிக்கா, சீனா இல்லை.. முதலிடம் பிடித்த நாடு எது? News Lankasri

நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
