பேருந்து சேவைகள் இன்மையால் போராட்டத்தில் ஈடுபட்ட ஹட்டன் பயணிகள்(Photos)
தூர பிரதேசங்களுக்கு செல்லும் சில பேருந்து சேவைகள் இடம்பெறாததால் இதற்கு உடனடி தீர்வை பெற்று தரக்கோரி ஹட்டன் பகுதியில் பயணிகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (19) காலை ஹட்டன் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் பயணிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும், “கோட்டா கோ ஹோம்,” “கோட்டா பைத்தியம்” என்ற பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, பிரதான பேருந்து மார்க்கத்தை மறித்து நடத்தப்படும் போராட்டம் காரணமாக,
கொழும்பு, கண்டி, நுவரெலியா, பொகவந்தலாவ, மஸ்கெலியா உள்ளிட்ட தூர
பிரதேசங்களுக்கு செல்வதற்கு வருகைத் தந்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை
எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










