யாழில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி! உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது (Video)
யாழ். வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கணவனும், மனைவியும் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த தம்பதியினர் மின் ஒழுக்கு காரணமாக படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும், மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்த மனைவியின் கையில் அலைபேசி சார்ஜர் வயர் இருந்துள்ளதுடன்,அந்த அலைபேசி வெப்பமாகி சேமித்து வைத்திருந்த பெட்ரோல் கொனள்கலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.  
முதலாம் இணைப்பு
யாழ். வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும்
தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கணவனும், மனைவியும் சடலமாக மீட்பு
வல்வெட்டித்துறை - நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது 30) மற்றும் அவரது மனைவி கிருசாந்தினி (வயது 26) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணையில் வெளிவந்த தகவல்
தம்பதி உறங்கிய அறையில் தீப்பரவல் ஏற்பட்டதை அவதானித்த வீட்டார் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாக காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        