மனைவியை கொன்ற கணவன் பொலிஸில் சரண்
இறம்புக்கனை ஹேன்பொல பகுதியில் குடும்பச் சண்டையில் கணவன்,மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். கொலை செய்த நபர், பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட பெண்மணி 62 வயதான இறம்புக்கனை பத்தம்பிட்டிய என்ற பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். கொலை சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டு, உடல் இறம்புக்கனை வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டு வந்த காரணத்தினால், கொலையாளியின் மகள் அவரை கண்டியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றுக்காக கணவன், வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த கொலை நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக இறம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



