மனைவியின் கை கால்களை கட்டிவிட்டு முகத்தில் தீ வைத்த கணவன்
மொரட்டுவ, பிரதேசத்தில் மனைவியின் கை, கால்களை கட்டி வைத்து முகத்தில் தீ வைத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் பெறுவதற்கு பணம் வழங்காமையினால் கோபமடைந்த கணவர் இவ்வாறான செயலை செய்துள்ளார்.
பொலிஸ் அவசர இலத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகம் மற்றும் கைகள் இரண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக பாணதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஐஸ் போதை பொருளுக்கு கடுமையாக அடிமையானவர். இதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை அவர் குடும்பத்தில் ஏற்படுத்தியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட போது, பெண்ணின் மடியில் தனது 4 மாத குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை காப்பாற்றவதற்காக அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
