பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்.
தனது 99ஆம் வயதில் அவர் மரணமடைந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
இன்று காலை வின்ட்சர் கோட்டையில் இளவசர் பிலிப் உயிர் பிரிந்தது. உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இணைந்து அரச குடும்பமும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலதிக அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என அரண்மனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதய பிரச்சினை காரணமாக கடந்த பல நாட்களாக லண்டன் மருத்துவமனயைில் சிகிச்சை பெற்று வந்த இளவரசர் பிலிப், சமீபத்தில் தான் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
It is with deep sorrow that Her Majesty The Queen has announced the death of her beloved husband, His Royal Highness The Prince Philip, Duke of Edinburgh.
— The Royal Family (@RoyalFamily) April 9, 2021
His Royal Highness passed away peacefully this morning at Windsor Castle. pic.twitter.com/XOIDQqlFPn