மனைவியை கொலை செய்த கணவன் உயிரை மாய்ப்பு - விசாரணயில் வெளியான முக்கிய தகவல்
குருணாகல், பிங்கிரிய பிரதேசத்தில் தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த மனைவியை, கத்தியால் கொடூரமான முறையில் வெட்டிக் கணவன் கொலை செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கணவனும் தனது வீட்டிற்குச் சென்று விஷம் குடித்து உயிரை மாய்த்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாதக்கணக்காக தம்பதியினருக்கு இடையே நிலவி வந்த குடும்பத் தகராறு முற்றியமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாய்
கொல்லப்பட்டவர் பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, படிவெல பகுதியை சேர்ந்த பத்மா குமாரிஹாமி என்ற 65 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டவர் அவரது கணவரான ஹேமசிறி ரத்நாயக்க என்ற 59 வயதுடைய நபராகும்.
தங்களது வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் வசித்து வந்த இந்த தம்பதியரின் மகள் திடீரென காணாமல் போயுள்ளார்.
இதனால், அவரது சிறு பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வதற்காக, உயிரிழந்த பெண் சில மாதங்களுக்கு முன்பு மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
சந்தேக நபரான அவரது கணவர் மகளின் வீட்டில் தங்கியிருக்க வேண்டாம் எனவும் மீண்டும் தனது வீட்டிற்கு வருமாறும் பலமுறை கூறியுள்ளார்.
கொடூரமாகத் தாக்கி கொலை
எனினும் மனைவி வர மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவன் பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மறுநாள் மனைவியை மீண்டும் அழைத்து வருவதற்காக மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
எனினும், மனைவி அதற்குக் சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த கணவர், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் மனைவியின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர், லிந்தபிட்டிய பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் வந்து விஷம் குடித்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 17 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri