மனைவியை கொலை செய்து விட்டு தவறான முடிவெடுத்த கணவர்
பூகொட, மண்டாவல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் ஒருவர் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(23.10.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, வீட்டுக்குள் வைத்து கணவரே தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கணவன் கைது
சந்தேகத்தின் பேரில் கணவனை கைது செய்ய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 46 வயது எனவும், உயிரை மாய்த்துக் கொண்டவருக்கு 54 வயதெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குடும்ப தகராறு
விசாரணையில் இருவருக்கும் இடையே சில காலமாக தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri