மனைவியை பார்க்க வந்த நபரை தாக்கி கொலை செய்த கணவன்
மறைமுக தொடர்புகளை வைத்திருந்த பெண்ணை பார்க்க சென்ற நபர் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இரத்தினபுரி ஹிதெல்லன பிரதேசத்தில் நடந்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்தில் இறந்த நபர்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதித்து சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.
குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் ஹீதெல்லன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவருடன் மறைமுக தொடர்பை வைத்திருந்ததுள்ளதுடன் அந்த பெண்ணை சந்திக்க சென்ற போது பெண்ணின் கணவன் அவரை தாக்கி மரத்தில் கட்டி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளது.