மனைவியை வெள்ளையாக்க முகப்பூச்சு கொடுத்த கணவர் - உறவினர்கள் கண் முன் நடந்த கொடூரம்..!
வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெடுங்கேணி - நைனாமடு பகுதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர், தனது மனைவிக்கு 1000 ரூபாய் பெறுமதியான வெள்ளையாகும் முகப்பூச்சு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். எனினும் மனைவி அதனை பூசவில்லை.
இதனால் கோபமுற்ற கணவர் மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.
9 நாட்கள் உயிருடன் இருந்த குடும்பஸ்தர்
இதனைத் தொடர்ந்து, தம்பி முறையானவரிடம் இருந்த தீ மூட்டும் கருவியை பறிக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக தீ மூட்டப்பட்டு பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இதன்போது விரைந்து செயற்பட்ட அவருடைய உறவினர்கள், இளைஞரை மீட்டு, வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் 9 நாட்களின் பின் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.