முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவியை காணவில்லையென கணவர் முறைப்பாடு (PHOTOS)
முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் இருந்து வவுனியாவுக்கு கடந்த 05-11-2021 அன்று சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லையென கணவனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகுமார் ஜெயந்தி எனும் 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு இன்று வரை வீடு திரும்பாத நிலையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் தாயை காணாது தவித்து
வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது மனைவி தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்றும், பொலிஸாரும் தனது மனைவியை தேடி தர அக்கறை காட்டவில்லை என்றும், தாயை காணாத நிலையில் பிள்ளைகள் தவித்து வருவதாகவும், தெரிவிக்கும் கணவன் தன்னுடைய மனைவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தனது 0765350421 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறும் கோரியுள்ளார்.
இதேவேளை பொலிஸார் தனது மனைவியை தேடித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,15 வயதுடைய ஆண் மகன் மற்றும் 12 வயதுடைய மகள் மற்றும் 7 வயதுடைய மகள் ஆகியோர் தாயை காணாது மிகுந்த சோகத்தில் வாடுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan