வவுனியாவில் பெண் கழுத்தறுத்து கொலை.. கணவன் கைது
வவுனியா - கருவேப்பங்குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் 37 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
விசாரணை நடவடிக்கைகள்
இதன்போது கணவனை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது கழுத்து பகுதியில் கத்தியால் அவர் குத்தி மயக்கமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam