பிறந்த சிசுவை கொன்று வீதியில் வீசிய பெற்றோர்
பிறந்த உடனே சிசுவை வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய கணவன், மனைவி ஆகியோரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் முல்லேரியா பகுதியில் நேற்றிரவு (08.08.2023) இடம்பெற்றுள்ளது.
முல்லேரியா பண்டார மாவத்தை களனிமுல்ல தெருவில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு சிசுவை பெற்றெடுத்துள்ளதுடன், சிசுவை வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசியுள்ளதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமை
இதனை தொடர்ந்து இரத்த கறைகளை தொடர்ந்து சென்ற பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழந்தையின் தந்தையென கூறப்படும் நபர் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான கணவனும் மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |