சீனாவில் கழிவுப்பொருட்களாக ஒதுக்கப்பட்ட உரங்களை இறக்குமதி செய்த இலங்கை: இரா.சாணக்கியன்

By Kumar Jan 10, 2022 06:03 PM GMT
Report

சீன வெளி விவகார அமைச்சரும் மகிந்த ராஜபக்சவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவிபோல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நொச்சிமுனை ஆலையடி சித்திவிநாயகர், கண்ணகியம்மன் ஆலயத்திற்கான மின்குமிழ் ஒரு தொகுதி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியின் மூலம் குறித்த மின்குமிழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆலயத்தின் தலைவர் எஸ்.ருத்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலய குருக்கள், நிர்வாகசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆலய பரிபாலன சபையினால் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்,


இலங்கை அரசாங்கமானது தனது மோசமான தீர்மானத்தின் ஊடாக அண்மையில் சீன நிறுவனம் ஒன்றுக்கு 690 மில்லியன் அமெரிக்க பலர்களைச் செலுத்தியுள்ளது.

விவசாய அமைச்சின் தவறான தீர்மானத்தின் காரணமாகச் சீனாவில் கழிவுப்பொருள்களாக ஒதுக்கப்பட்ட இலங்கையில் விவசாயிகள் பயன்படுத்த முடியாத உரங்களை இறக்குமதி செய்தபோது அதனை இந்த நாட்டில் பயன்படுத்த முடியாது என நீதிமன்றம் கட்டளையிட்டதன் பிறகு சீனா இலங்கையில் உள்ள ஒரு வங்கியைத் தடைசெய்தது.

அதனைத் தொடர்ந்து 690 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டது. இலங்கையின் பணத்தில் 130கோடி ரூபாவுக்கு மேலாகத் தண்டப்பணமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த பணம் இந்த நாட்டின் மக்களது பணம்.

மகிந்த ராஜபக்சவின் குடும்ப தோட்டத்தில் தேங்காய் பறித்து விற்றோ, பசில் ராஜபக்ச விவசாயம் செய்து உழைத்த பணமும் இல்லை. இந்த நாட்டின் மக்கள் செலுத்திய வரிப்பணமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

மக்களது வரிப்பணத்தினையெடுத்து வேறு ஒரு நாட்டில் தேவையற்ற செலவினை செய்துவிட்டு இந்த நாட்டு மக்களை மிகவும் மோசமான நிலைக்குத்தள்ளியுள்ளனர்.

நேற்றையதினம் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் மகிந்த ராஜபக்சவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவி போல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள்.

இலங்கை மக்களின் நலன்கள் தொடர்பாகச் சிந்திக்கும் நிலையில்லை. இன்று இலங்கை மக்கள் பஞ்சத்தில் வாழும்போது தங்களின் எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அந்த நாட்டுக்கு இவ்வாறு பெருந்தொகை பணத்தினை கொடுத்துள்ளனர்.

இதனை இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் நபர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் உணரவேண்டும். இவர்கள் இன்று மக்கள் படும் கஷ்டங்களைப்பற்றிப் பேசாமல், மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில முக்கியமான பாடசாலைகளின் நிர்வாகத்திற்குள் தலையிடுகின்றார்கள்.

கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். இன்று ஆசிரியர்களை இடமாற்றுவதன் மூலம் மட்டும் இந்த பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றால் அவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்கவேண்டும்.

இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை என்பது பெயர் பெற்ற மிக முக்கியமான பாடசாலையாகும்.

தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக, தங்கள் அரசியல் இலாபங்களுக்காக சிவானந்தா தேசிய பாடசாலை போன்ற பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இவ்வாறான அரசியல் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி பாடசாலைக்குள் கல்வி நடவடிக்கைகள் சீராக நடக்கவேண்டும். எப்போது மாணவர்களின் கல்வியில் கைவைத்து தங்கள் அரசியலை முன்னெடுத்தார்களோ அன்றே அவர்களின் அழிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது.

இனிவரும் காலத்திலாவது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அவர்கள் செயற்படவேண்டும். 13ஆம் அரசியல் சீர்திருத்தத்தை அமல்படுத்தக்கோரி தமிழ் கட்சிகள் திட்டத்தை ஆரம்பித்து இருந்தார்கள்.

இந்த வேலைத்திட்டம் தமிழரசுக்கட்சி ஆரம்பத்திலே தலைவருக்குக் கூட அழைப்பில்லாமல் அந்நிகழ்வுகள் இடம்பெற்றது. அதிலே இரண்டாவது, மூன்றாவது கூட்டத்தின் பின் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கலந்து கொண்டிருந்தார்.

அதிலேயே நான் நினைக்கின்றேன் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இறுதியாக ஒரு கூட்டத்திலே மலையகத் தலைவர்கள், இஸ்லாமியத் தலைவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ் கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வரைபு ஒன்றைத் தயார்ப்படுத்தி அதை டிசம்பர் மாதம் 26ஆம் திகதி அனைவரும் தயார்ப்படுத்தியதாக அறியக்கூடியதாக இருந்தது.

அதனை அடுத்து அதில் சில மாற்றங்களைப் பற்றி எதிர்வரும் காலங்களில் பேச வேண்டும் என்று கூறி சில முன்மொழிவுகள் வந்திருந்தது. பலவிடயங்கள் பூர்த்தி அடையாமல் இருக்கின்றது என நினைக்கின்றேன்.

நான் பங்காளி கட்சிகளின் தலைவரும் அல்ல கட்சியின் தலைவரும் அல்ல, இதை நேரடியாகக் கட்சியிலே தலைமைத்துவப் பதவியில் இருக்கும் நபர்களிடம் கேட்கவேண்டும்.

ஆனால் நிச்சயமாக அவ்வேலைத் திட்டம் கைவிடப்படவும் இல்லை, அது முடிவுக்கு வரவும் இல்லை. அவ்வேலைத் திட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

எம்மை பொறுத்தவரையில் நாம் கிழக்கை மட்டும் மையமாக வைத்து அரசியல் செய்யும் கட்சியல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சி என்பது வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் நிலைப்பாட்டைப் பற்றியும் நாம் சிந்தித்துச் செயல்படும் ஒரு கட்சி.

வடக்கு ,கிழக்கு என்ற இரு மாகாணங்களிலும் எதிர்காலத்தில் சிந்திக்கும் ஒரு கட்சி என்ற அடிப்படையில் என்ற கருத்து என்னுடைய கட்சியினுடைய கருத்தாகத் தான் கட்சியினுடைய நிலைப்பாட்டிலிருந்து தான் நாம் அதைப் பார்க்க வேண்டும்.

உண்மையிலேயே அந்த வரைவானது ஒரு முடிவுக்கு வரவில்லை. பல பக்கத்தால் நான் 3 அல்லது 4 வரைபுகள் பற்றி அறிந்தேன். நாம் அதை இறுதியாக இந்தியத் தூதரகம் அல்லது இந்தியன் நாட்டிற்குக் கையளிக்கும் அந்த வரைவைப் பார்த்த பின் அதை ஆராய்ந்து அந்த வரைவைப் பற்றி சில கருத்துக்களை கூறினேன்.

அதற்கு ஒரு சில கட்சிகள் 13ஆம் திருத்தத்தை மாத்திரம் அமல்படுத்துங்கள் என்று சொல்லி இருந்தாலும் கூட, சம்பந்தன் உட்பட மாவை சேனாதிராசா கூறியிருந்தார்கள்.

13ஆம் திருத்தம் மாத்திரம் அமுல்படுத்துவது தொடர்பில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக சில விடயங்களில் சிலர் 13ஆம் திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப்படாததை இப்படியான பல விடயங்களை நாம் உள்ளடக்க வேண்டும் எனக் கூறிய காரணத்தினால் இதுவரை சில பாகம் மட்டும் உள்ளது.

இந்த அறிக்கை முடிவுக்கு வந்ததன் பின் இந்தியப் பிரதமருக்கும் இந்திய நாட்டினருக்கும் கையளிக்கப்பட்ட பின் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நான் கருத்தை எதிர்வரும் காலங்களில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

30 Dec, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில், கொழும்பு, London, United Kingdom

22 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, உடுவில், வவுனியா

04 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

08 Jan, 2011
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், கொழும்பு, கல்லடி, Dartford, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US