வீடொன்றுக்குள் மர்மான முறையில் உயிரிழந்த கணவன், மனைவி - இரத்த காயங்களுடன் சடலங்கள் மீட்பு
களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த கணவன், மனைவி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஏகல்ல ஓயா பகுதியில் அமைந்துள்ள இருமாடி வீடொன்றின் மேல் மாடியில், தங்கியிருந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தம்பதி அங்கு வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் மீட்பு
விஜிதசிறி தசநாயக்க என்ற 62 வயதுடைய நபரும் அவரின் இரண்டாவது மனைவி எனக்கூறப்படும் புஷ்பா ஷிரோமணி என்ற 55 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிந்த பெண்ணின் சடலத்தில் இரத்தக் கறைகள் காணப்படுவதுடன், சடலம் துணியொன்றினால் மூடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடு கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்த நிலையில், இந்த மரணங்கள் சில நாட்களுக்கு முன்னரே நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.