வெளிநாட்டில் கணவன் - இலங்கையில் இளம் தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை
புத்தளம், வென்னப்புவ இளம் தாயை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வென்னப்புவ, லுனுவில, தெரேசா வத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இந்த பாதிப்புக்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும், கடந்த 5 ஆம் திகதி அவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் பெண் வீட்டில் இருந்த போது சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தன்று இரவு 9.00 மணியளவில் பெண் வீட்டில் இருந்து வெளியே வந்த போது சந்தேகநபர் இந்த செயலை செய்துள்ளார்.
குறித்த பெண் வெளிநாட்டில் உள்ள தனது கணவருக்கு அறிவித்ததையடுத்து கணவரின் ஆலோசனையின் பேரில் நேற்று உதசிரிகம பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
you my like this video

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri
