லண்டனில் தொடரும் மர்மம்! - மற்றுமொரு இளம் யுவதி மாயம்
லண்டனில் காணாமல் போயுள்ள இளம்பெண் குறித்து பொலிஸார் முக்கிய தகவல்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். ஹேக்னேவை சேர்ந்த ஏஞ்சலினா என்ற இளம் பெண் மாயமாகியுள்ளார்.
அவரின் பாதுகாப்பு குறித்த கவலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த பெண் எப்போதில் இருந்து காணாமல் போனார் என்ற தகவலை பொலிஸார் வெளியிட்வில்லை. இந்நிலையில், காணாமல் போன பெண்ணின் இரண்டு புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஒரு புகைப்படத்தில் அப்பெண் பாடசாலை சீருடை அணிந்திருக்கிறார். வீட்டில் இருந்து காணாமல் போன ஏஞ்சலினா தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, அண்மைய காலமாக லண்டனில் இளம் பெண்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், சிலர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
அண்மையில் சபீனா நெஸ்ஸா என்ற பெண் லண்டனில் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்டப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து லண்டனில் பெண்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
இந்நிலையிலேயே, ஏஞ்சலினா என்ற இளம் பெண் காணாமல் போயுள்ளமை குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.







அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
