கடந்த ஆண்டில் பேருந்து விபத்துக்களினால் நூற்றுக்கணக்கானோர் பலி
இலங்கையில் கடந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற பேருந்து விபத்துக்களினால் 198 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பாதசாரிகள் மட்டுமன்றி பயணிகளும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. கடந்த வருடத்தில் மொத்தம் 2005 பேருந்து விபத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
அதில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 515 பேருந்துகள் விபத்தில் சிக்கியுள்ளன. அதே போன்று 1490 தனியார் பேருந்து விபத்துச் சம்பவங்களும் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளன.
வாகன விபத்துக்கள்
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து விபத்துக்கள் மூலம் 50 பேரும், தனியார் பேருந்து விபத்துக்கள் மூலம் 148 பேரும் கடந்த ஆண்டில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மொத்தமாக 24,589 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் மூலம் 2359 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |