மட்டக்களப்பில் பட்டி பட்டியாக ஒதுங்கும் நூற்றுக்கணக்கான யானைகள் - அச்சத்தில் ம்ககள்
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பட்டியாக நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(08.02.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
யானைகளை துரத்தும் பணி
நூற்றுக்கணக்கான யானைகள் இவ்வாறு ஊருக்குள் வருவதை கிராம வாசிகள் அவதானித்துள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் தினமும் அச்சுத்துடனே வாழ்வதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மிக நீண்ட்ட காலமாகவிருந்து அப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை துரத்தும் பணியினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
