புத்தளம் பகுதியில் திடீரென உயிரிழந்த நூற்றுக்கணக்கான பறவைகள்!
புத்தளம் – வண்ணாத்துவில்லு – எலுவான்குளம் பகுதியிலுள்ள வயல் நிலமொன்றில் நூற்றுக்கணக்கான பறவைகள் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வனவிலங்கு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.
ஒரு புறா உள்ளிட்ட வயல்களில் காணப்படும் 150க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பறவைகள் இவ்வாறு உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைகள் இறந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. எனினும், பயிர்களுக்கு தெளிக்கப்பட்ட பூச்சுக் கொல்லிகள் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த பறவைகளை ஏனைய விலங்குகள் சாப்பிடுவதற்கு முன்னர் அவை அந்த பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.