மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் இலங்கையர்களின் மனிதாபிமான செயல்
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் பணி புரியும் இலங்கை ஊழியர்கள், மத்திய கிழக்கில் நடந்த போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
லெபனானில் பணிபுரியும் இலங்கையர்கள், கூடாரங்களிலும் வீதிகளிலும் வசிக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உணவு வழங்குவதற்காக, ஒவ்வொரு வாரமும் தங்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரு விடுமுறை நாளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
வீட்டுப் பணியாளர்களாக கடுமையான சூழ்நிலைகளில் நீண்ட நேரம் உழைத்து, தங்களின் குறைந்த ஊதியத்திலிருந்து ஒரு சிறிய தொகையைச் சேமித்து உதவுகின்றனர்.
இலங்கையர்களின் மனிதாபிமான செயல்
போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரிசி, சீஸ், வெங்காயம் மற்றும் தண்ணீர் போன்ற பொருட்களை அவர்கள் விநியோகித்துள்ளனர்.

தங்கள் சொந்த சிரமங்கள் இருந்த போதிலும், இது நமக்கும் நடக்கலாம் என்ற காரணத்தினால் தான் இந்த வழியில் உதவ முடிவு செய்ததாக இலங்கை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri