கோவிட் அச்சம் காரணமாக உதவ மறுத்த மக்கள்! பரிதாபமாக ஒருவர் பலி
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தத்தீவு கடற்கரைப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிட் அச்சம் காரணமாக உதவ முன்வராத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் வீழ்ந்து கிடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் அருகில் சென்று அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்வராத நிலையில்,குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த களுவாஞ்சிகுடி பொலிஸாரும், அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தரும், சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த நபரை மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில்,பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நபர் செலுத்தி வந்ததாகக் கருதப்படும் துவிச்சக்கர வண்டியை மீட்டு பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவரின் பெயர், ஊர் என்பன இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






