மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய பொறிமுறை அவசியம்! சி.வி.கே வலியுறுத்து
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் அதனை காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உலகில் சீனா குறைந்த பணத்தைக் கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடாகத் திகழ்கின்ற நிலையில் தனது அடி மடியில் கை வைக்காத நிலையில் சீனா நடந்து கொள்கின்றது. நாங்கள் அறிந்த வரையில் முன்னர் ஆப்கானிஸ்தான்காரர்களே குறைந்த பணத்தைக் கூடுதல் வட்டிக்குக் கொடுப்பவர்களாக அறிந்திருக்கின்றோம்.
ஆனால், இந்நிலை மாறி சீனா தற்போது உலகில் குறைந்த பணத்தைக் கூடிய வட்டிக்குக் கொடுக்கும் நாடாக மாறி வருகின்றது. இலங்கைக்குக் கடன் வழங்கிய நாடுகளில் சீனாவே அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில் தான் வழங்கிய கடனை எந்த வழியிலும் சீனா மீளப்பெறுவது நிச்சயம்.
இலங்கைக்கு சீனா வழங்கிய கடன்
சர்வதேச நாணய நிதியம், சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கூறி வரும் நிலையில் இதுவரை அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.
நாங்கள் ஒன்றைக் கூறுகின்றோம், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனைக் காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஆகவே, சீனாவிடம் இலங்கை பெற்ற கடனை எந்த வழியிலும் சீனா மீளப் பெறுமே தவிர கொடுத்த கடனுக்காகத் தனது அடிமடியில் கைவைக்க விடாது.
வடக்கு கிழக்கில் சகல பிரதேசங்களிலும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற வருகின்ற நிலையில் திலீபனின் படத்தை ஊர் ஊராக கொண்டு சென்று அஞ்சலி செலுத்த வேண்டிய தேவையில்லை.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி சக கட்சிகளின் ஒன்றினைவோடு பேரெழுச்சியாக நடைபெற்றது. அதனால் அதனை குழப்ப வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் வந்திருக்காது.
மக்களின் எழுச்சி பேரணி
மக்களின் எழுச்சியை பார்த்து குழப்பும் சிந்தனைகளோடு இருந்தவர்கள் கூட தமது சிந்தனையை கைவிட்டு இருப்பார்கள் ஆனால் தியாக தீபம் திலீபனின் உருவ படம் தாங்கி வந்த வாகனத்தில் இருவர் மட்டுமே இருந்தனர்.
அதில் ஓருவர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், இவர்கள் தமது கட்சி அரசிலுக்காக தமது கட்சியை வளர்க்க இதனை செய்தனர் என்றே நினைக்கிறன். அங்கு தாக்குதல் நடத்திய பெண்மணி உள்ளிட்டவர்கள் முதலில் திலீபனின் படத்திற்கே தாக்குதல் மேற்கொண்டனர்.
திலீபனை இலக்கு வைத்தே தாக்கினர். இவர்களும் திலீபனை கொண்டு சென்று அவர்களிடம் அடிவாங்க வைத்துள்ளனர். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கஜேந்திரன் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை வன்மையாக நானே கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதலை நடாத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுள்ளார்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
