இளவாலை வைத்தியசாலை மீது மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமையும் வைத்தியர் கடமையில் இல்லாமையும் தொடர்பான செய்தியை அடுத்து இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது.
இந்த விளக்கத்தை எதிர்வரும் 30.03.2026 இற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். பிராந்திய இணைப்பாளர் தன்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாணவனுக்கு நேர்ந்த துயரம்
நேற்றுமுன் தினம்(26.03.2026) இளவாலை ஹென்றிஸ் பாடசாலை மாணவன் ஒருவர் பாடசாலை முடிந்து வீடு செல்லும்போது வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில் அவரை மேற்குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையிலேயே அங்கு சிகிச்சை வழங்காத நிலை காணப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த மாணவனை, பாடசாலையின் முச்சக்கர வண்டியை வைத்தியசாலைக்கு வரவழைத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உண்மையை வெளிக்கொண்டு வரும் விசாரணை: சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு சிலரின் கலக்கம் - அமைச்சர் பகிரங்கம்
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri