இளைஞனின் கையை முறித்த விவகாரம்: பொலிஸாரை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு
நெல்லியடி - மந்துவில் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை தாக்கி கையை முறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நெல்லியடிப் பொலிஸாரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்துக்கு விளக்கம் அளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் நான்காம் திகதி விசாரணைக்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, நெல்லியடி பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம்முக்கு சொந்தமான கேபிள் வயர்கள் அறுக்கட்டமை தொடர்பில் மந்துவில் பகுதியில் வசிக்கும் இளைஞர் நெல்லியடிப் பொலிஸாரால் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அழைப்புக் கட்டளை
கைது செய்யப்பட்ட தன்னை, பொலிஸ் காவலில் தாக்கி கையை முறித்தார்கள் என பாதிக்கப்பட்ட இளைஞன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததோடு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்தார்.
இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு நெல்லியடிப் பொலிஸாருக்கும் குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் அழைப்புக் கட்டளை அனுப்பியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
