சுரேஷ் சலே விவகாரத்தில் சீ.ஐ.டீ மீது மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விவகாரத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீது இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.
அந்த வகையில் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் போதிய காற்றோட்டம் இல்லாமை உள்ளிட்ட பல பொதுவான அடிப்படை குறைபாடுகள் நிலவுவதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்து சுட்டிக்காட்டியுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடு குறித்து ஆணைக்குழு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது
. இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் நேற்று வாக்குமூலம் பெற வேண்டியிருந்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது உறவினர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு குறித்து சிஐடி அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்திற்கு அருகில் உள்ள ஏனைய கைதிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பலரிடமும் ஆணைக்குழு ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri