நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன: பஹியங்கல ஆனந்த சாகர தேரர்
நாட்டில் வெளிப்படையாகவே மனித உரிமைகள் மீறப்படுவதாக பஹியங்கல ஆனந்த சாகர தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பிழையான பொருளாதார மூலோபாயங்களை எதிர்த்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை எவ்வாறு பயங்கரவாதமாக அடையாளப்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகள்
பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளினாலும், மனித உரிமை மீறல்களினாலும் நாட்டுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதற்கான பொறுப்பினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும், அவர்களைச் சுற்றியிருப்பவர்களும் பொறுப்பு ஏற்க வேண்டு என தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
