மனித உரிமைகளுக்கான துணைச் செயலாளர் மகிந்த சமரசிங்கவுமன் விசேட சந்திப்பு
அமெரிக்காவின் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணைச் செயலாளர் உஸ்ரா சேயாவை, இலங்கையின் தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்து உரையாடியுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள தூதுவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
மனித உரிமைகள் பேரவை
ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் பின்னணியில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து துணைச் செயலாளர் உஸ்ரா சேயாவுக்கு விளக்கமளிப்பதற்காக தூதுவர் சமரசிங்கவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சேயா வெளியிட்ட ருவிட்டர் பதிவு
Thank you to @AmbSamarasinghe for an engaging discussion today on decades of vital U.S.-Sri Lankan ties and continuing U.S. support to the Sri Lankan people. Civilian security, accountability, and the protection of human rights are key to our partnership. ?? ?? pic.twitter.com/CTKWcHccYf
— Under Secretary Uzra Zeya (@UnderSecStateJ) September 8, 2022
சந்திப்பைத் தொடர்ந்து, துணைச் செயலாளர் சேயா வெளியிட்ட ருவிட்டர் பதிவு ஒன்றில், அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவைப் பற்றி ஈடுபாட்டுடன் கலந்துரையாடியதற்காக தெரிவித்துள்ளார்.
சிவில் பாதுகாப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவை
இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மைக்கு முக்கியமானது என்று அமெரிக்க உயர்
அதிகாரி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
