மனித புதைகுழி விவகாரம் - ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்

Anura Kumara Dissanayaka Douglas Devananda chemmani mass graves jaffna
By Theepan Jul 09, 2025 08:59 AM GMT
Report

செம்மணியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுகளில் மனித எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் நிலையில், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

மேலும், எந்த காரணம் கொண்டும் புதைகுழி அகழ்வுகள் நிறுத்தப்படாமல் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பரிதாப நிலை

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பரிதாப நிலை

மனிதப் புதைகுழிகள்

கிளீன் ஸ்ரீலங்காவின் ஆட்சியில் ஈ.பி.டி.பி. தூய்மையான கட்சி என்பது நிரூபணமாகும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி விவகாரம் - ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் | Human Graves Issue Douglas Urgent Letter To Anura

மேலும் , "செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற அகழ்வுப் பணிகளில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் அகழப்பட்டு வருகின்றன.

எமது பிரதேசத்தில் யுத்தம் நிலவிய காலத்த பல்வேறு மனிதப் புதைகுழிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதில் பல்வேறு தரப்புக்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றன என்ற தகவல்களும் இருக்கின்றன.

தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த மாணவனுக்கு நேர்ந்த கதி

தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த மாணவனுக்கு நேர்ந்த கதி

முழுமையான விசாரணைகள் 

இவை தொடர்பாக கடந்த காலங்களில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் யார் என்பது வெளிக் கொண்டு வரப்படாத நிலையில், செம்மணியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின் அகழ்வுப் பணிகளும், அங்கு மீட்கப்படுகின்ற மனித எச்சங்களும், புதைகுழி விவகாரத்தினை மீண்டும் பேசு பொருளாக மாற்றி இருக்கின்றது.

மனித புதைகுழி விவகாரம் - ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் | Human Graves Issue Douglas Urgent Letter To Anura

இந்தநிலையில், இவ்விடயம் தொடர்பில் எமது மக்களிடையே நிலவுகின்ற குழப்ப நிலையை மேலும் தூண்டிவிடுவதாக சில சுயலாப அரசியல் சக்திகளின் கருத்துகளும், செயற்பாடுகளும் அமைந்து வருகின்றன.

எனவே, மேற்படி விடயம் தொடர்பில் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை தொடர்ச்சியான முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

செம்மணி மாத்திரமல்ல, மன்னார், கொக்குளாய், துணுக்காய், மண்டை தீவு என்று எங்கெல்லாம், மனித புதைகுழிகள் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம், அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவரை கண்டுபிடித்த நாட்டில் செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை! சாமர சம்பத்தின் கவலை

விடுதலைப் புலிகளின் தலைவரை கண்டுபிடித்த நாட்டில் செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை! சாமர சம்பத்தின் கவலை

மனித எச்சங்கள்

மனித எச்சங்கள் மீட்கப்படுமாயின் அவை எந்தக் காலப் பகுதியில் புதைக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பதும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

மனித புதைகுழி விவகாரம் - ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் | Human Graves Issue Douglas Urgent Letter To Anura

சிறீதர் தியேட்டரில்கூட மனித புதைகுழிகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் சில செய்திகளை காணக்கூடியதாக இருந்தது.

அவ்வாறு புதைகுழி விவகாரத்துடன் ஈ.பி.டி.பி. தொடர்புபடுத்த விரும்புகின்றவர்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம்.

அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மண்டைதீவிலே புதைகுழிகள் இருப்பதாகவும் அதுதொடர்பாக எமது செயலாளர் நாயகத்திற்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த, நீதி அமைச்சர், வெறுமனே செவி வழிச் செய்திகளை வைத்து கதை சொல்லுவதை விடுத்து, ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் விசாரிக்கிறோம் என்று சொல்லி இருக்கின்றார்.

எனவே சிறீதர் தியேட்டரில் புதைகுழி இருக்கின்றது ஈ.பி.டி.பி. மக்களை கொலை செய்து புதைத்தது சமூக ஊடகங்களில் கருத்துக்களை பரவ விடுகின்றவர்கள் உரிய முறையிலே முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.

 அரசியல் நோக்கங்கள்

அதனை ஈ.பி.டி.பி. ஆவலுடன் எதிர்பார்க்கிறது. கிளீன் ஸ்ரீலங்கா என்ற மகுட வாக்கியத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஆட்சிக் காலத்தில் ஈ.பி.டி.பி. கிளீனான அரசியல் கட்சி என்ற வெளிப்படுத்தப்படும், எம்மீது அரசியல் நோக்கங்களுக்காக பூசப்பட்டு வருகின்ற அனைத்து சேறுகளும் கழுவப்படும் என்று நம்புகின்றோம்.

மனித புதைகுழி விவகாரம் - ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் | Human Graves Issue Douglas Urgent Letter To Anura

அந்த அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்கவிற்கு எமது செயலாளர் நாயகத்தினால் இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதில் ஒரு கடித்ததில் ஏற்கனவே கூறியது போன்று, புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதுடன், இன்னுமொரு கடிதத்தில், கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில், எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட தொழில்சார் பாதிப்புக்களை குறைக்கும் நோக்கில் கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்ற மண்ணெண்னை டீசல் போன்றவற்றுக்கு லீற்றர் ஒன்றிற்கு 25 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது.

அந்த திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பதால், அவ்வாறான ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தி கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US